புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகராஜன் குறிஞ்சிக்குமரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்தாண்டு உறுண்டதென்ன - எங்கள்
ஒளிவிளக்கே நீ அணைந்ததென்ன?
வாழ வழி பலயிருந்தும்- நீ
வாழாமல் போனதென்ன
வாழவழி புரியவில்லை - நமக்கோ
நீ வாழா இப்பபூவுலகில்
அடிவயிறு எரியுதையா
அணைத்து விட எழுந்து ஓடிவாடா!
நல்லோரைக் கண்டிருந்தால் - உனக்கு
நல்லதிசை கிடைத்திருக்கும்- நீ
சென்றதிசை எத்திசையோ?
அது வெகுதுாரம் நாமறியோம்!
தூக்கத்துக்கு சென்றவனே..
யார் கண்டோம் அது இறுதியென்று!
துயர் எழுத வைத்துவிட்டு
தூயவனே நீ எங்கு சென்றாய்?
துடிக்கின்றோம் நாமிங்கே.
எங்களின் உன்னதக் கோவிலே குமரா...!
எம்மதியுள்ளவரை மறையாது
உன் அன்புமுகம் இறுதிவரை!
உன் ஆத்மா சாந்தி பெற இறைவனை
வேண்டிக்கொண்டு உனது
ஏக்கத்தில் தவித்து நிற்க்கும்
தாய் சகோதரங்கள்....