கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமது அன்புக்குரிய பண்புநிறை செல்வியக்கா இனிய பேச்சும் பாசம் நிறைந்த விசாரிப்பும் கேட்போரை இன்னுமொரு தடவை அவரது கனிந்த குரலை கேட்க மாட்டோமா என ஏங்க வைக்குமே !
இனியது முடியாதே !
என்றே நினைக்கையில் நெஞ்சு கனக்கிறதே !
மீண்டும் ஒருநாளில் செல்வியக்காவின் அதே மந்திரக் குரலால்
என்தந்தை லாசறஸ் அவர்களது மறைவில் 2005 நிகழ்ந்த போது இலண்டனில் இருந்து சுவிஸ் வசிக்கும் எனை அழைத்து ஆறுதல் சொன்னார். அன்புகூடி ஆறுதலாய் அளாவளாவிய நேசமிகு குரலது ஓய்ந்ததுவோ !
என்னைப்போல் ஏராளமான உறவுகளின் பிரிவுகளில் தவித்தவர்க்கு தேடியாறுதல் நல்கிய தாயே உமது இழப்பினை இனியதம் குடும்பத்தினரால் ஈடுசெய்திடத்தான் முடிந்திடுமோ !
உறவுகளால்தான் ஏற்றிடல் முடியுமோ!
வானகம் மேவியே
சிவபதமெய்திட
அன்னாரின் ஆத்மசாந்தி வேண்டுதல் தவிர்த்து என்செய்திடல் முடியும் எம்மால் !
ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்
துயர்பகிரும்
அன்புத்தம்பி
லாசறஸ் சண்முகராஜா
(சண்முகம்) பூரணயோகி
பூரண ஆச்சிரமம் சுவிஸ் 13-12-21 திங்கள்
Write Tribute
எமது அன்புக்குரிய பண்புநிறை செல்வியக்கா இனிய பேச்சும் பாசம் நிறைந்த விசாரிப்பும் கேட்போரை இன்னுமொரு தடவை அவரது கனிந்த குரலை கேட்க மாட்டோமா என ஏங்க வைக்குமே ! இனியது முடியாதே ! என்றே நினைக்கையில்...