Clicky

மலர்வு 03 JUN 1951
உதிர்வு 05 DEC 2021
அமரர் சண்முகராஜா தர்மகுணவதனா (செல்வி)
வயது 70
அமரர் சண்முகராஜா தர்மகுணவதனா 1951 - 2021 ஊரெழு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

லாசறஸ் சண்முகராஜா (சண்முகம்) பூரணயோகி 13 DEC 2021 Switzerland

எமது அன்புக்குரிய பண்புநிறை செல்வியக்கா இனிய பேச்சும் பாசம் நிறைந்த விசாரிப்பும் கேட்போரை இன்னுமொரு தடவை அவரது கனிந்த குரலை கேட்க மாட்டோமா என ஏங்க வைக்குமே ! இனியது முடியாதே ! என்றே நினைக்கையில் நெஞ்சு கனக்கிறதே ! மீண்டும் ஒருநாளில் செல்வியக்காவின் அதே மந்திரக் குரலால் என்தந்தை லாசறஸ் அவர்களது மறைவில் 2005 நிகழ்ந்த போது இலண்டனில் இருந்து சுவிஸ் வசிக்கும் எனை அழைத்து ஆறுதல் சொன்னார். அன்புகூடி ஆறுதலாய் அளாவளாவிய நேசமிகு குரலது ஓய்ந்ததுவோ ! என்னைப்போல் ஏராளமான உறவுகளின் பிரிவுகளில் தவித்தவர்க்கு தேடியாறுதல் நல்கிய தாயே உமது இழப்பினை இனியதம் குடும்பத்தினரால் ஈடுசெய்திடத்தான் முடிந்திடுமோ ! உறவுகளால்தான் ஏற்றிடல் முடியுமோ! வானகம் மேவியே சிவபதமெய்திட அன்னாரின் ஆத்மசாந்தி வேண்டுதல் தவிர்த்து என்செய்திடல் முடியும் எம்மால் ! ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம் துயர்பகிரும் அன்புத்தம்பி லாசறஸ் சண்முகராஜா (சண்முகம்) பூரணயோகி பூரண ஆச்சிரமம் சுவிஸ் 13-12-21 திங்கள்

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 08 Dec, 2021