1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சங்கரப்பிள்ளை வயிரவப்பிள்ளை
முன்னாள் சீமெந்துக் கூட்டுத்தாபனம்- காங்கேசன்துறை, வாகனப் பராமரிப்பு பகுதி மூத்த இயந்திர தொழில்நுட்பவியலாளர்- முகாரி
வயது 78

அமரர் சங்கரப்பிள்ளை வயிரவப்பிள்ளை
1942 -
2021
கொல்லங்கலட்டி, Jaffna, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கிளானை கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், பன்னாலை தெல்லிப்பழையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சங்கரப்பிள்ளை வயிரவப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:07/08/2022.
ஆண்டு ஒன்று ஆனாலும்
உங்கள் அன்பு
முகமும்
அரவணைப்பும் உங்கள்
நினைவலைகளும்
எங்கள்
நெஞ்சை விட்டு
அகலவில்லை அப்பா!
தூணாக காலமெல்லாம்
காத்திடுவாய் என இருந்தோம்
காலன் அழைத்தவுடன்
கரைந்ததேனோ காற்றோடு?
வானம் விரிந்திங்கு
வண்ண
மழை தூவினாலும்
காணும்
உறவெல்லாம்
கைகொடுத்து
உதவினாலும்
அப்பா உங்கள்
உறவு
இப்போதில்லை
என்ற உணர்வு
அனலாய்
எறிக்குதப்பா
அகிலமே
வெறுக்குதப்பா!
நீங்கள் பூவுலகை விட்டு
மறைந்த போதும்
உங்களது
ஆத்ம வழிகாட்டலிலும்
உங்களது நினைவுகளுடனும்
எமது வாழ்க்கை பயணம்
தொடரும் அப்பா...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்