Clicky

14ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 APR 1946
இறப்பு 09 NOV 2010
அமரர் சங்கரப்பிள்ளை இராசரத்தினம்
வயது 64
அமரர் சங்கரப்பிள்ளை இராசரத்தினம் 1946 - 2010 கொடிகாமம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: 05-11-2024

யாழ். கொடிகாமம் மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சங்கரப்பிள்ளை இராசரத்தினம் அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அன்புள்ள எங்கள் அப்பாவே
அன்பால் எம்மை காத்து நின்று
அறிவூட்டி எமை வளர்த்தாய்!

அரியதோர் பொக்கிஷத்தை
ஆண்டவன் பறித்தானே
ஆண்டு 14 முடிந்தாலும்
ஆறாமல் தவிக்கின்றோம்!

ஆறுதலை இனி யார் தருவார்
என்றும் உன் நினைவுகள் சுமந்து
உன் வழியில் உன் பிள்ளைகள்
நாம் என்றும் பயணிப்போம்!

ஒளி தரும் சூரியனாக இருள்
அகற்றும் நிலவாக ஊர் போற்றும்
 நல்லவனாக பார் போற்றும்
வல்லவனாக வாழ்வாங்கு வாழ்ந்து-
எங்களை வாழ வைத்த தெய்வமே

உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
 மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!

உங்களை உருக்கி எமக்காக
 உயிர் உள்ளவரை வாழ்ந்தீர்கள்
 எங்களை நினைத்து எங்களுக்காய்
இவ்வுலகில் எல்லாம் செய்தீர்கள்!

மனம் என்றும் ஆறாத்துயரோடு
மீளாத் துயில் கொண்ட
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
எங்கள் இருகண்ணீர் மலர்
 தூவி இறைவனோடு இணைய
வேண்டி அஞ்சலி செய்கின்றோம்......!!!

தகவல்: குடும்பத்தினர்