கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sabaratnam Vijayabarathy
1963 -
2021
இந்த மானிட வாழ்க்கையில் நாம் எத்தனை விதமான மனிதர்களைச் சந்தித்து இருந்தாலும் எமது மனதில் சிலரை மட்டும் அதிகம் பிடித்துக் கொள்கிறது. அவர்களில் ஒருவர்தான் எங்கள் பாரதி. உறவினராக இருந்தாலும் 30 வருடத்திற்கு மேலாக ஒரு நண்பராக அன்பு, பாசத்திற்கு ஓர் உதாரணமாக வாழ்ந்தவர். பாரதி, நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்த செய்தியை நம்பவே முடியவில்லை. மனைவி பிள்ளைகளை ஆறாத் துயரில் தவிக்க விட்ட அந்த இறைவன் கல்நெஞ்சம் படைத்தவனா? நல்லவர்களைத்தான் ஆண்டவன் முதலில் எடுத்துக் கொள்வான் என்பது உண்மையா? உன் பிரிவை நினைத்து கதிகலங்கி நிற்கும் உறவினர், நண்பர்களுக்கு என்ன பதில் சொல்வது? காலம்தான் பதில் கூற வேண்டும். என்றும் உங்கள் நினைவுடன் பொன் இரத்தினபாலன்
Write Tribute
Words can't express how saddened we are to hear of your loss, please accept my deepest sympathies for your loss.