யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தனை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சபாரத்னம் செல்லப்பாக்கியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நாட்கள் எத்தனை ஆனாலும்
எம்னம விட்டு அகலாது உங்கள் நினைவு
முழுநிலவு போன்ற முகம்
முன் வந்து கலங்க வைக்க
மொத்தமும் தொலைத்து நிற்கின்றோம் .
கனவில் நீ வரும் பொழுது
தேடுகின்றேன் நீ வருவாய் என்று
அது கனவென்று தெரிந்ததும்,
கதறுகின்றேன் தனிமையில் இன்று...
கடைசி வரை இருப்பாய் என்று
மறந்து விட்டேன் வாழ்வை அன்று
கடந்து விட்டாய் எங்களை விட்டு ..
எங்கள் கனவுகளை கலைத்து விட்டான்
காலன் உன்னை கவர்ந்து ...
உங்களின் ஆத்மா சாந்தியடைய என்றும்
இனறவனை பிரார்த்திக்கின்றோம்...
இனறவனை பிரார்த்திக்கின்றோம்...
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உணவளித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அம்மாவின் ஆத்மா சாந்தியடைவதாக.