

யாழ். துன்னாலை மத்தி தேனப்பாய் வீரபத்திர கோயிலடியைப் பிறப்பிடமாகவும், பெல்ஜியம் Ghent ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுவர்க்கஸ்ரீ சபாபதிஐயர் உருத்திரானந்தக்குருக்கள்(கிளி ஐயா) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
முதலாம் வருட சிரார்த்த திதி: 03-07-2025
அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே!
அன்போடு எங்களை அனுதினமும் அரவணைத்தாய்
அல்லும் பகலும் அயராமல் எமை காத்தாய்
உலகுக்கு நீ உத்தமனாய் வாழ்ந்து நின்றாய்
உயிரிலும் உணர்விலும் ஒன்றாக கலந்திருந்தாய்
உயிர் உள்ள வரை உங்களோடு இருப்பேன் என்றாய்
ஒன்றுக்கும் கலங்கவில்லை நாம் உன்னோடு இருந்தவரை
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும் காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று கனவிலும் நினைக்கவில்லை
சத்தம் இல்லாமல் சித்தம் துடிக்க வைத்து
மொத்தமாய் எங்களை மோசம் செய்ததென்ன?
ஆண்டுகள் எத்தனை ஆனாலும் நீங்காது உங்கள்
நினைவு எம் நெஞ்சோடு!
நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த வரமாக நீங்கள் இருந்தீர்கள்!
காலங்கள் காத்திருந்தொம்
கனவாக வந்தீர்கள் வீட்டிற்கு
காலனை வென்றிட கந்தனைப் பற்றினோம்
வந்தான் அவன் காலகந்தனாக.
உனது கொடியேற்ற உற்சவதினத்தில்
அழைத்துச் சென்று விட்டாயே.
எல்லாம் நீயே லிம்பேர்க் முருகா.
கந்தா சரணம், முருகா சரணம், பாலமுருகனே சரணம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
மிகத்துயர் அடைந்தோம். ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி சந்திரசேகர ஐயர் குடும்பம் கொழும்பு 13