யாழ். காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும், கேகாலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாபதிப்பிள்ளை அருளானந்தம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
பதினொரு ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
எம் இதயக் கமலத்தில் வீற்றிருக்கும்
தெய்வத் திருமுகத்தை
மறப்போமா அப்பா
வாழ்ந்த வாழ்வில் பெருமை கண்டு
எமக்கெல்லாம் வழி காட்டி நின்றவரே
உங்களை எப்படி அப்பா
மறக்க முடியும்..
உயிருக்கு மேலானவரே..!
நீர் மறைந்து போன பின்பும்
உம் நினைவுகளை சுமந்த உறவுகளின்
நெஞ்சமெல்லாம் கண்ணீரால்
நனைந்து போகின்றதய்யா!
உங்கள் பாசத்தை உங்கள் பரிவை
இனி நாங்கள் காணவே முடியாதா அப்பா
ஏன் எதற்கு எம்மை விட்டு சென்றீர்கள்!
வாருங்கள் அப்பா!!
எங்களை பாருங்கள்
எங்களுக்கு வழிகாட்டுங்கள் அப்பா!!
எத்தணை ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவு எமை விட்டு நீங்காது
மரணம் என்பது மண்ணில்
உள்ளோர்க்கே நீங்கள்
எம் மனதில் என்றென்றும் வாழ்வீர்கள்
தெய்வமாய்!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..