
கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், யாழ். ஊர்காவற்துறை, நீர்கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், சுவிஸ் Malters ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சபாநாதன் தவசீலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நண்பர்களின் சமர்ப்பணம்
அன்பான நண்பன் தவசீலன்- எம்
மனங்களை ரணமாக்கி விட்டு
ஓடி மறைந்து ஓராண்டு ஆனதுவோ!
நாடி வந்தோர் நல்ல தேவை உணர்ந்து
நாளும் உதவிய நல்ல மனிதன்
எல்லோருடனும் இன்முகத்துடன் பழகும் பாங்கு
கல்லையும் கசிய வைக்கும் கனிவான பேச்சு
கரும்பான எங்களின் நட்பு நித்தமும்
மலர்ந்த முகத்துடன் மகிழ்ந்த காலம்
நட்பு என்ற வார்த்தைக்கு
இலக்கணமாக வாழ்ந்து காட்டியவன் நீ தவசீலன்
எங்களுக்கு நீ நண்பனாக மாத்திரமன்றி
ஆசானாக, வழிகாட்டியாக எங்கள்
குடும்பத்தில் ஒருவனாக இருந்தவன் நீ
பிரிவு என்பதன் சோகம் வலி என்ன? என்பதை
உன்னால் உணர்கிறோம்!
ஆண்டுகள் பல தொடர்ந்த எம்நட்பு
மீண்டும் வாராதோ என ஏங்கும் தனிமை
ஆறுதல் சொல்ல ஆளில்லா வெறுமை
மாறாத உந்தன் மாசற்ற அன்பை
பேறாக பெற்ற நான், பெருமை கொள்கிறேன்.
There is nothing more painful than to live without your loved one. I can’t explain how much I’m suffering since your death. This was the hardest year of my life.