
கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், யாழ். ஊர்காவற்துறை, நீர்கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், சுவிஸ் Malters ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சபாநாதன் தவசீலன் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலி.
எங்கள் இனிய சகோதரனே!
அன்பிற்கும் பண்பிற்கும்
இலக்கணமாய் இருந்தாய்,
உன் கனிவான பேச்சாலும்
நன்நடத்தையாலும்
எல்லோரையும்
கவர்ந்தாயே,
யாரேனும் உதவி கேட்டால்
மறுப்பின்றி அள்ளி அள்ளிகொடுத்தாயே!
உன் உயிரை பறிக்க அவனுக்கு
எப்படி மனம் வந்ததோ?
உன் பிரிவை தாங்கமுடியாமல் தவிக்கின்றோம்....
உமது ஆத்மா சாந்தி பெற பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.......
எமது அன்புச் சகோதரன் இறையடி சேர்ந்த செய்திக்கேட்டு ஓடி வந்து துயரத்தில் பங்குகொண்டு ஆறுதல் செலுத்தியவர்களுக்கும், தொலைபேசி மூலம் அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
There is nothing more painful than to live without your loved one. I can’t explain how much I’m suffering since your death. This was the hardest year of my life.