யாழ். கரவெட்டி மத்தொனியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, கனடா Toronto, பிரான்ஸ் Mulhouse ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ருக்மணி பத்மநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
பத்துமாதம் சுமந்து
ஞாலத்தில் ஜனனம்
விழிக்குள் விழி பார்த்து
இரவு பகல் இமை மூடாது
தத்தி தவளுகையில்
நித்தம் வழிகாட்டி
உன் உதிரத்தை
எமக்கு உணவூட்டி
முற்றத்து நிலவில்
தித்திக்கும் குழையல்
சத்தம் செய்யாமல்
எம் குறை பொறுத்து
சுற்றும் பூமியில் முழு மனிதனாக்கி
வலம்வர செய்த அன்னையே
நீ மறைந்தாலும்
உன் நினைவுகள் என்றும் மறையாது
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 06-01-2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் பங்குபற்றுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Address:
Resturant chicken & burger
33, Rue de l'arsenal,
68100 Mulhouse,
France.