யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரூபன் சோமநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு அகலாது
நாங்கள் உங்களை மறந்தால்
தானே நினைப்பதற்கு...
என் ஆருயிர்த் தெய்வமே
என் அன்பார்ந்த உத்தமரே
எங்கள் அகல் விளக்கு அணைந்ததென்ன?
பாசமுள்ள அப்பாவே
எங்கள் அருகிருந்து
எமை வளர்த்து ஆளாக்கி
கல்வி பயில வைத்து
கடைத்தேறும் வேளைதனில்
எம் கடமை செய்யும் முன்னே
எமை விட்டுப் பிரிந்ததென்ன
பெற்றவரை இழந்திங்கு
பெரும்பாவி ஆகிவிட்டோம்!
அமைதியின் அடைக்கலமாய்...
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எம் சகோதரனே...!
உடல்கள் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன
எம் உடன்பிறப்பே
நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்துதான் போகின்றோம்
உருக்குலைந்து மாய்கின்றோம்
வருடங்கள் ஐந்து வந்திட்ட போதினிலும்
நம்ப மறுக்கிறதையா எங்கள் மனங்கள்
உம் நல்ல முகம் மறைந்ததென்று
சொல்ல முடியவில்லை எம் சோகத்தை
மெல்ல முடியவில்லை உம் நினைவுகளை
உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்.
We Miss you Buddy .