4ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
26
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy-ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த றிச்சேட் பேபி சறோஜா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் நான்கு கடந்தாலும் உங்கள்
நினைவுகள் உள்ளத்தை விட்டு அகலாது
நானும் மகளும், மருமகனும், உறவுகளும்
தாங்கமுடியாத வேதனையில் சொல்வதற்கு
வார்த்தையும் இல்லாமல் தவிக்கின்றோம்
மறக்க முடியாத சோகத்தை தந்து விட்டு
எங்கு சென்றீர்கள் ?
கற்றுத்தந்தவள் நீ
பற்று வைத்தவளும் நீ
இனிய சுற்றுத்தருணங்களை
எமதாக்கியவளும் நீ
இற்றுவிடா இனிய வாழ்வை எமக்களித்து
அதில் நீ அற்றுப்போனதேன் அம்மா!!
உதித்த நாளில் உதிர்ந்த எம் கோயிலே
குடியிருந்த நாம் தவிக்கின்றோம்
குதூகலிக்க நீயின்றி
நெஞ்சில் வலியுடனும்
நீங்காத நினைவுகளோடும்
என்றென்றும் உங்கள் அழியா நினைவுகளுடன் வாழும்
ஆத்மா சாந்திக்கு என்றும் இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்