1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
26
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy-ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த றிச்சேட் பேபி சறோஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
தாய்க்கு வரைவிலக்கணமே நீதானம்மா!
எங்களை அன்பு மழை பொழிந்து
பாசமாய் வளர்த்தெடுத்தாயே!
நீங்கள் மண்ணுலகை பிரிந்து
ஓராண்டு சென்றதம்மா!
கண்ணதனை இமையது காப்பது போல்
கண்ணான பிள்ளைகளைக்
கருத்தோடு நீரிருந்து கலங்காது காத்தீர்
கலங்குகின்றோம் நீரின்றி உம் நினைவால்
பார்க்கும் இடமெல்லாம் நீங்கள் நிற்பதுபோல்
நீங்கள் எம்முடன் வாழ்ந்த காலங்கள்
எம்முள்ளே நித்தமும் அலைமோதிய
வண்ணம் உள்ளது அம்மா!!!
உங்கள் கைபிடித்து உங்கள் ஆதரவில்
உங்கள் வழியிலேயே உங்கள் பின்னால்
நடந்தோம் அம்மா.. ஆனால் இன்று
கைபிடித்து அரவணைக்க நீங்கள்
இல்லையே எங்களுடன்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்