2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
27
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy-ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த றிச்சேட் பேபி சறோஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
"நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்
நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்"
-உபாகமம் (26:6)
அன்புடனும் பண்புடனும்
பாசத்துடனும் வழிநடத்திய
எங்கள் அன்புத் தாயே
நீங்கள் இல்லாத உலகம் என்றும்
இருள்மயமானது எங்கே காண்போம்
உங்கள் மலர்ந்த முகத்தை
அன்பு நிறைந்தவளே
அம்மாவே அருங்குணங்கள்
பல கொண்டவளே!
ஆண்டு இரண்டு அகன்றே
போனதம்மா அருகில் நீங்கள்
இல்லாமல் ஏழேழு ஜென்மங்கள்
எடுத்தாலும் எமக்கு
அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!
உங்கள் வாழ்வுதனை வர்ணிக்க
வார்த்தைகள் தேடியே
தவிக்கின்றேன் அன்னையே
இன்று நீங்கள் இல்லாத
இவ்வுலகில் வாழ்வதற்கு
என்ன பாவம் செய்தேனோ
அன்னையே!!!
தகவல்:
குடும்பத்தினர்