அன்பான மாமா, வாழ்க்கை இன்னும் நீளுமென்று வாழா இருந்துவிட்டோம். ஓர் நாட்டில் இருந்திருந்தால் உன் நிழலையாவது தொட்டிருப்போம்!! இறப்பு மட்டும் எப்படி எல்லோரையும் இளக்குகிறது.??. நீங்கள் ஏற்றிவைத்த தீபங்கள் அநேகம்!! கோவிலிலும், உறவுகளிலும்!! உங்கள் அக்காள் வீட்டு மரங்களின் கீழும் உங்கள் உதவி உரங்கள் அன்பின் கொடுப்பனையாக!! கண்டிப்பான, அன்புமிகுந்த உள்ளம் உங்களது?வாழ்க்கையோடும் விதியோடும் அன்புக்காக மட்டுமே போராடிய உள்ளம் உங்களது. என்ன அதிசயம் உங்களோடு உங்கள் சின்னமாமாவும் சேர்ந்துள்ளாராமே?? நீங்கள் இருவரும் தாய்மாமன்- மருமகன் என்றாலும் நண்பர்கள் போல வாழ்ந்ததாக என் அம்மா சொல்லியிருக்கிறார். இறப்பிலும் நீங்கள் நெருக்கமானதை என்ன சொல்வது?? உங்கள் உலகில் அம்மம்மா, அப்பு, பேபிமாமி, ஐயா, குஞ்சன் எல்லோரிடமும் சொல்லுங்கள் நாங்களும் வந்துகொண்டிருக்கிறோம் என்று!! மாமா நிம்மதியாக உறங்குங்கள்!! உங்கள் உடலையும் ஆன்மாவையும் உடைத்த காரணிகள் எல்லாம் காணாமல் போன நேரத்தில் இருந்து..............??????
அன்பின் பிறப்பிடமாய் அமைதியின் இருப்பிடமாய் பொறுமையின் சின்னமாய் விளங்கிய மாமா உங்கள் ஆத்மா சாந்தியடைய நாமும் இறைவனை பிரார்த்திக்கின்றோம்.