மரண அறிவித்தல்

Tribute
18
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரணவாய் மூத்தவிநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட இரட்ணம் தருமலிங்கம் அவர்கள் 10-02-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இரட்ணம் தஞ்சம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிவமணி(பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,
சுதாகரன்(லண்டன்), சுகந்தினி(மீரா- சுவிஸ்), சுஜீவா(றீற்ரா- சுவிஸ்), சுபரேகா(ரேகா- சுவிஸ்), சரவணபவன்(சரவணன்- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சர்வா(லண்டன்), குணசீலன்(சுவிஸ்), சிவநேசன்(சுவிஸ்), பகீதரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பூமணி, சிவமணி(கனடா), அம்பிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரோஜினி, திஷானி, அஸ்ருதா, ஆருஜன், இஸ்வீஜா, இஷா, சந்தோஷ், சாருஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
அன்பின் பிறப்பிடமாய் அமைதியின் இருப்பிடமாய் பொறுமையின் சின்னமாய் விளங்கிய மாமா உங்கள் ஆத்மா சாந்தியடைய நாமும் இறைவனை பிரார்த்திக்கின்றோம்.