யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், சவுதி அரேபியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், சுவிஸ் Baden ஐ தற்போதைய வசிப்பிடமாவும் கொண்டிருந்த ரட்ணம் மகேந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா உங்கள் ஆளுமை
ஒரு பிரமிப்பு.
விடாமுயற்சி அனைவருக்கும் முன்னுதாரணம்.
இல்லாதோருக்கு உதவும் தன்மை உயர்ந்த குணம்.
உங்கள் அழகிய தோற்றமும் பகிடியான பேச்சுகளும் மறக்கமுடியவில்லை.
உங்கள் மனைவி பிள்ளைகள் என்று சொன்னாலே ஒரு மரியாதை.
நீங்கள் ஒரு கடின உழைப்பாளி.
தேவையற்ற செலவுகளில் உங்களுக்கு உடன்பாடில்லை.
வசதிகள் காட்டி எம்மை வளர்த்ததில்லை.
வாழ்க்கையில் போராடும் குணத்தை எமக்கும் ஊட்டி வளர்த்தீர்கள்.
மகேந்திரனின் பிள்ளைகள் என்று பெயர் சொல்ல நாம் வாழ்ந்து காட்டுவோம்.
அப்பா. நீங்கள் எம்முடன் இன்னும் வாழ்ந்திருக்கலாம்.
எம் உயர்வுகளைக் கண்டு மகிழ்ந்திருக்கலாம்.
நீங்களும் அம்மாவும் உங்கள் சந்தோசங்களைப் பின் போட்டு உழைத்தீர்கள்.
இனி ஓய்வெடுப்போம் என நினைத்தபோது கடவுள் உங்களை அழைத்துவிட்டார்.
அப்பா உங்கள் பாடசாலை நாட்களில் தலைமைச் சாரணன் சிறந்த நடிகன் உதைபந்தாட்டவீரன்
அழகான இளைஞன் என்ற பல முகங்கள் கொண்டவர் என உங்கள் Manipay Hindu College நண்பர்கள் சொல்லக்கேட்கும் போது
உங்களுக்குப் பிள்ளைகளாகப் பிறந்தது எமக்கெல்லாம் ஒரு கொடை.
அப்பா தாயக நற்பணிகளை அம்மாவும் நாமும் தொடர்கிறோம்.
நீங்கள் அமைதியா உறங்குங்கள் அப்பா.
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.