யாழ். சுன்னாகம் பருத்தியோலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Tuttlingen ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் கிருஸ்ணமூர்த்தி அவர்களின் நன்றி நவிலல்.
ஆலம் விழுதென எம்மை
அரவணைத்த உறவே
அன்னை பரிதவிக்க
அகிலம் துறந்தனையோ
மனையாள் மனந்துடிக்க
விண் பறந்ததேனய்யா
மக்கள் அழும் கண்ணீர்
மடைதிறந்த வெள்ளமாகத்
தந்தை எனும் விளக்கு
தானணைந்து போனதுவோ
தங்கையர் தவித்துநிற்க
மண்ணுலகம் பிரிந்தீரோ
செந்தமிழின் சிறப்பாகச்
சீருடன் உம் பெயர் வாழ்க!
ஓங்கும் நற்புகழோடு நின்
உயிரமைதி பெறுக!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.