

யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இரத்தினலிங்கம் கிருஷ்ணதாஸ் அவர்கள் 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினலிங்கம், பத்மாவதி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற அருந்தவராஜா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சத்தியவாணி அவர்களின் பாசமிகு கணவரும்,
கிருஷாந்தன்(பிரித்தானியா), நிஷாந்தன்(பிரித்தானியா), அகல்யா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கோசலா(பிரித்தானியா), சுஜிதா(பிரித்தானியா), ஸாருஹாஷன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சந்திரதாஸ், குணசேகரன், ஜெயசேகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீகாந்தன், மதியழகன், ஸ்ரீமதிதேவி, மணிவண்ணன், மலர்விழி, மான்விழி, காலஞ்சென்ற ராஜராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அகரன்(பிரித்தானியா), லேகா(பிரித்தானியா), ஜஸ்வின்(அவுஸ்திரேலியா), கிருத்வின்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.