
யாழ். உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் மேற்கு அன்னங்கையை வதிவிடமாகவும் கொண்டிருந்த இரத்திணம் அரியமலர் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழ்வின் தத்துவத்தை எமக்குணர்த்தி
தரணியில் வாழ்வாங்கு வாழ
வழியமைத்து தந்த அம்மாவே!
உன் உயிரில் பாதி தந்தாய் அம்மா
நான் விடும் மூச்சிலே உன் கருவறை வெப்பம் உணர்கின்றேன்
என் சிரிப்பினிலே நீ பட்ட துன்பம் காண்கின்றேன்
உலகானவளே உன்னையும் ஒரு தரம் சுமக்கக் கேட்கின்றேன்
இறைவன் வரம் தருவாரோ?
அம்மா ஏழு ஜென்மங்களில் நம்பிக்கை இல்லை
இனி ஒரு ஜென்மம் இருந்து உயிரினமாய் பிறந்தால்
உன்னை எந்தன் மகளாக்கும் பாக்கியம் மட்டும் போதும்
எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தி விட்டு
மீளாத் துயில் கொண்ட அன்புத் தெய்வத்திற்கு
எமது கண்ணீர் அஞ்சலிகள்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
உங்கள் பிரிவால் வாடும்
மகள் சைலா, மருமகன் சந்திரகுமார் ஷகீலா,
சிவதர்ஷன், பேத்தி சர்மளா,பேத்தி சரிக்கா, பேரன் தர்சன்,
பூட்டன் சரீன், ஆசான், பூட்டி றீனா