வேலன் தங்கத்தின் நாற்படையில் நடுவில் உதித்தவரே! காலனுடன் போட்டி போட்டு பலமுறை வென்றவரே! புன்சிரிப்பும் துறு துறு நடையும் கொண்ட சின்னக்கண்டு குறைச்சுருட்டு குடிக்கும் அழகு காண அந்த இயமனுக்கு பொறுக்கவில்லையோ! சந்திரனையும் இந்திரனையும் தவிக்க விட்டு சரஸ்வதியிடம் சென்றீரோ! சிவனுக்கும் மாலாக்களுக்கும் மட்டுமல்ல ஒட்டுமொத்த அடைப்பிற்கும் நீங்கள்தான் ஆசம்மா ஆசையம்மா, ஆசம்மாவின் ஆத்மா முத்தியடைய கடுக்காய் மூர்த்தியை வேண்டுகிறோம், ஓம் வைரவா ஓம் வைரவா ஓம் வைரவா.