Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 05 JUN 1957
விண்ணில் 01 JUN 2021
அமரர் இராசையா குகதாசன்
ஓய்வுபெற்ற ஆசிரியர்- நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், பழைய மாணவர்- ஹாட்லிக்கல்லூரி, பேராதனை பல்கலைக்கழகம்- BSc, Agriculture (Batch: 1978-1982)
வயது 63
அமரர் இராசையா குகதாசன் 1957 - 2021 கரவெட்டி மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா குகதாசன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி. 

விண்ணுலக வாழ்வில் மூன்றாம்
ஆண்டு நினைவஞ்சலி

எங்கள் அன்புத் தெய்வமே
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
மூன்றாண்டு சென்றபோதும்
எங்கள் இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கின்றீர்கள் ஐயா...

கண்களை மூடி நாங்கள் தூங்க
கனவில் உங்கள் முகம் தெரிகிறதே
பாசம் காட்டும் உங்கள் முகத்தை
இனி நாம் எங்கே காண்போம் 
அப்பா...

வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து எங்களை
வானுயர பெயர் விளங்க வைத்த எங்கள்
அன்புத் தெய்வமே அப்பா...

நீங்கள் இறைவனடி சேர்ந்து மூன்றாண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!

உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!

நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!

ஆன்மா என்றென்றும் அழியாது
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices