யாழ். இணுவில் கிழக்கு தியேட்டர் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா கதிர்காமராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் வந்ததோ?
ஒவ்வொரு நிமிடமும் உம் நினைவுதான் சகோதரனே!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - சகோதரனே
என அழைப்பதற்கு நீங்கள் இல்லையே சகோதரனே!
நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த வரமாக நீங்கள் இருந்தீர்கள்!
புன்னகை புரியும் உம் முகம் தெரிகிறது தினமும்
ஆனாலும் அது உண்மை இல்லை என்று
நினைத்தவுடன் எம் மனம் கலங்குகிறது!
உதிர்ந்து நீங்கள் போனாலும்
உருக்கும் உம் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும் சகோதரனே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
By Jeyathason KS Sundram Family From Malaysia.