யாழ். இணுவில் கிழக்கு தியேட்டர் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா கதிர்காமராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இரண்டு சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும் துயரமும்
எங்கள் மனதை விட்டு மறையவில்லையே!!
இதயத்தில் இரக்கம் கொண்டவனே
எம்மை விட்டு சென்றதும் ஏனோ?
புன்னகை பூத்த
பொன்முகமும்- மறைந்தது ஏனோ
பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உங்கள் அன்பு மட்டுமே!
பூங்காவாய் நீரே இருந்தீர்
பறவையாய்ப் பறந்துவிட்டீர்
பூக்களெல்லாம் வாடிவிட்டோம்
பூமுகத்தை தேடுகின்றோம்.
உதிர்ந்து நீங்கள் போனாலும்
உருக்கும் உம் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும்
அமைதியின் அடைக்கலமாய்...
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எம் சகோதரனே...!
நிலவுக்கு ஒரு நாள் விடுமுறை உண்டு
ஆனால் உன் நினைவுக்கு என்றும்
விடுமுறை இல்லை என் இதயத்திலிருந்து...
என்றென்றும் உன்னை நினைத்திருப்பேன்
என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன்
அன்று நான் இறந்திருப்பேன்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
By Jeyathason KS Sundram Family From Malaysia.