Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 15 AUG 1955
ஆண்டவன் அடியில் 26 OCT 2023
அமரர் இராசையா ஈஸ்வரலிங்கம்
இளைப்பாறிய RMV உதவி மேலதிக அதிகாரி, சமாதான நீதவான்- JP
வயது 68
அமரர் இராசையா ஈஸ்வரலிங்கம் 1955 - 2023 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி:13-11-2024

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசையா ஈஸ்வரலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று சென்றதோ
ஆறவில்லை எங்கள் துயரம்
காலத்தால் எமை விட்டு
கண்ணிமைக்க பிரிந்தவரே

வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து எங்களை
வானுயர விளங்க வைத்த எங்கள்
அன்புத் தெய்வமே அப்பா

அன்பு ஒன்றை வாடகாய் கொடுத்து
எம் நெஞ்சில் அன்புடன் வாழ்கிறாய்- இன்றும்
தூண்டில்பட்ட மீனாய் துடிக்கிறோமப்பா!!!
உங்கள் நினைவில் இன்றும் தவிக்கிறோம்ப்பா!!!

எத்தனையாண்டுகளானாலும் உங்கள்
அத்தனை நினைவுகளும் எமைவிட்டு
என்றுமே பிரியாது அப்பா!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

 
தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்