Clicky

பிறப்பு 24 SEP 1949
இறப்பு 28 AUG 2026
திருமதி இராசம்மா இராஜறட்ணம்
ஓய்வுபெற்ற ஆசிரியர், உபஅதிபர் கிளி/பளை மத்திய கல்லூரி, ஓய்வுபெற்ற அதிபர்- (கிளி/இயக்கச்சி அ.த.க பாடசாலை, யா/துன்னாலை காசிநாதர் வித்தியாலயம், யா/கரவெட்டி மெ.மி.த.க பாடசாலை)
வயது 76
திருமதி இராசம்மா இராஜறட்ணம் 1949 - 2026 பளை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in peace
Mrs Rasammah Rajaratnam
பளை, Sri Lanka

நான் எங்கள் இராசம்மா ரீச்சரிடம் படிக்கவில்லை. ஆனால் அவரிடமிருந்து அதிக அன்பையும் அறிவுரையுயும் பெற்றுள்ளேன். தனது பாட ( விவசாயம்) மாணவர்கள் மட்டுமன்றி எல்லோருடமும் ஒரு தாய் போலப் பழகுவார். அவருடைய அறிவுரைகள் இன்றும் என் மனதில் நிறைந்துள்ளது. நீண்ட வருடங்களின் இடைவெளியில் கடந்த இரு வருடத்திற்கு முன்னர் ரீச்சரை நான் சந்தித்த போது , அவரது வார்த்தைகளில் எந்தவொரு மாற்றமும் இல்லாது இருந்தது என்னை வியக்க வைத்தது. ஆம் எமது ஆசான்களில் பெரும்பான்மையினர் தமது சொந்தப் பிள்ளைகள் போலவே மாணவர்களிடமும் பழகினர். அதுவே எங்களின் முயற்சிகளுக்கும் அத்திவாரமாக இருந்ததை நாம் மறுக்க முடியாது. இன்று எங்கள் அன்புக்குரிய இராசம்மா ரீச்சர் ( இலண்டனில்) இவ்வுலகைவிட்டுப் பிரிந்தாலும் , எங்கள் உள்ளங்களில் இருந்து எப்போதுமே பிரியமாட்டார் . அவரது அன்பும் ஆசியும் என்றென்றும் எம்மை நல்வழிப்படுத்தும் என்ற நம்பிக்கையோடு; ரீச்சரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்பதுடன், குடும்பத்தவர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் . ஓம் சாந்தி சாந்தி சாந்தி 💐💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Write Tribute

Tributes