திருமதி இராசம்மா இராஜறட்ணம்
ஓய்வுபெற்ற ஆசிரியர், உபஅதிபர் கிளி/பளை மத்திய கல்லூரி, ஓய்வுபெற்ற அதிபர்- (கிளி/இயக்கச்சி அ.த.க பாடசாலை, யா/துன்னாலை காசிநாதர் வித்தியாலயம், யா/கரவெட்டி மெ.மி.த.க பாடசாலை)
வயது 76
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Rasammah Rajaratnam
1949 -
2026
அம்மாவின் மறு உருவமாய்,அன்பையும் அறிவையும் அள்ளித் தந்த எங்கள் ஆருயிர் சித்தியே, இன்று உறவுகள் பலர் கூடி வந்தாலும்,உங்கள் அன்பு தனிச்சிறப்பானது! பாசத்தின் இலக்கணமே,பாதியிலேயே பிரிந்தது ஏனோ? சித்தி என்ற ஒரு வார்த்தையில்,அத்தனை அன்பையும் காட்டியவர் நீங்கள , சித்தி, ஆறாத் துயரில் அழுகின்றோம்,மீளாத் துயிலில் நீங்கள் தூங்கவோ! நீங்கள் ஊட்டிய உணவும், காட்டிய பாசமும்,நெஞ்சில் என்றும் அழியாதே, சித்தி, உங்கள் பாசக் குரல் கேட்காமல்,எங்கள் வீடு மௌனமாய் இருக்கிறதே, உங்கள் நினைவுகள் சுமந்து வாழ்கின்றோம்,உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்! கண்ணீர் அஞ்சலி சித்தி🙏🙏🤍🤍
Write Tribute
We are thankful to have shared memories with you. We will miss you siththi and your impact on our family. Love, Rubavathany & Daisyrani