எம் ஊரின் செல்வமே இராசம்மா! ஏழைகளுக்கு உதவும் வள்ளலே உன் புன்முறுவல் பூத்த வதனமது ஊரிடையே வாடியது எப்போது? இராசம்மா! உம் ஜனனம் நாம் கண்டதில்லை கல்வி வளர்ச்சி கண்டோம் – உங்களிடம் கல்வியதை கற்று தேர்ந்தோம் எம்மிடையே, ஆசிரியராய் அதிபராய் வலம் வந்தது கண்டு மகிழ்ந்தோம். இல்லற பந்தத்தில் இணைபிரியாது இராஜரட்ணம் ஐயாவை கரம் பற்றியது கண்டோம். இரண்டு நன் மக்களைப் பெற்றெடுத்து பெருவாழ்வு பெற்றீர். பிள்ளைகளின் பாசப் பிணைப்பால் அன்றோ இங்கிலாந்து தேசம் சென்றீர். நன் மக்களிடம் நல்லுறவாய் வாழ்ந்த அன்பு தாயானவள் என்றால் தானோ அவர்களின் அருகில் இருந்து உயிர் நீத்தீர். தாயாய் சகோதரியாய் அரவணைத்து எமக்கு அன்புடன் கல்வி போதித்தீர். எம்மைக் கண்டதும் அன்புடன் அரவணைத்து அப்பன், அம்மா என்று அழைத்து அன்பு பாராட்டிநீரே. இன்றோ! ஈரவிழிகள் பெருக்கெடுக்க இடியோசை போல் வந்தது எம்காதருகே செய்தி இங்கிலாந்தில் நின் உயிர் நின்றதன்றோ ஐயகோ இனிதொரு இன்முகத்தை எங்கு காண்போம். இராசம்மா! அம்மா!! ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! உம் துயரால் விழிநீர் சொரிகின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு, அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
We are thankful to have shared memories with you. We will miss you siththi and your impact on our family. Love, Rubavathany & Daisyrani