கிளிநொச்சி முல்லையடி பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், யாழ். தாமரைகுளத்தடி துன்னாலை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா இராஜறட்ணம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் உயிரில் கலந்த தாயே!
எமைவிட்டு பிரிந்து நாட்கள் 31
ஓடி மறைந்ததம்மா...
நித்தம் எங்கள் கண்களுக்குள்
நிறைந்திருக்கும் எங்கள் அன்புத் தாயே
நினைவெல்லாம் உங்களைச்
சுமந்தல்லோ நிற்கின்றோம்
நிலவை சூரியனை ஒளிர்கின்ற
தாரகைகளை பார்க்கையிலே
அங்கே அம்மா உங்கள் முகம்தானே
பட்டொளியாய் தெரிகிறது
நாட்கள் பல சென்றாலும் - எம்
மனதில் பசுமையாக
துளிர் விட்டுக் கொண்டேயிருக்கும்
எம் தாயே உம் பிரிவால் - மீளமுடியாமல்
நீரில்லா மீனைப் போல் துடிக்கிறோம் -தாயே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் பிரார்த்திக்கின்றோம் தாயே...
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், பழைய மாணவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
We are thankful to have shared memories with you. We will miss you siththi and your impact on our family. Love, Rubavathany & Daisyrani