Clicky

தோற்றம் 23 FEB 1940
மறைவு 18 MAY 2019
அமரர் இராசம்மா கனகரத்தினம்
வயது 79
அமரர் இராசம்மா கனகரத்தினம் 1940 - 2019 கொடிகாமம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

நக்கீரன் தங்கவேலு கனடா 20 MAY 2019 Canada

“பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின் நல் அறம் செய்வோர் நல் உலகு அடைதலும் அல்லது செய்வோர் அருநரகு அடைதலும்” (மணிமேகலை 16 86-89) உலக இயற்கை என்கிறார் சீத்தலைச் சாத்தனார். விசாகை தன மாமன்மகள் தருமதத்தனுக்குக் கூறும் அறிவுரையில், “இளமையும் நில்லா, யாக்கையும் நில்லா வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் மிக்க அறமே விழுத்துணை யாவது” என உணர்த்துகின்றாள். சாதல் புதுமை யில்லை; வாழ்தல் இன்பமென்று மகிழ்ந்தது இல் என்கிறார் கணியன் பூங்குன்றனார். உங்கள் அருமை அக்கா இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம். ஆனால் விதியை யார் மாற்ற முடியும்? எனது குடும்பம் சார்பாகவும் தமிழ்த் கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நக்கீரன் தங்கவேலு கனடா