யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசமணி செல்லத்துரை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
இறைவன் இயற்கையை படைத்தான்
இயற்கை எம் அம்மாவை உருவாக்கியது
அம்மா எம்மை உருவாக்கினாள்
பாலூட்டி தாலாட்டி பக்குவமாய் வளர்த்தாள்
வையத்துள் வாழ்வங்கு வாழ
உலக அறிவோடு ஞான அறிவிற்கும் வித்திட்டாள்
மனித நெறி தவறாது வாழ வைத்தாள்
வாழ்க்கைச் சக்கரம் வாழ்க்கையின்
நோக்கங்களை அடைந்து சுழலும் போது
இயற்கை எம் அம்மாவை ஒருநாள்
மீள எடுத்துக் கொண்டு விட்டது
இயற்கை மீண்டும் அம்மாவை
இறைவனிடம் அளித்து விட்டது
துளி மீண்டும் கடலில் கலந்து விட்டது
கடல் எங்கும் துளி பரவி விட்டது
துளியும் கடலே, கடலும் துளியே
நாமும் ஒரு துளியே, எம் துளியினுள்
கடல் இருக்கின்றது, அக் கடலில்
அம்மா ஒரு துளியாய் இருந்து
அவளின் துளிகளாகிய எம்மை
என்றும் வழிகாட்டிக் கொண்டிருக்கின்றாள்
உரு இன்றி எம்முள் இருந்து
எம்மை வழிகாட்டும் எம் அம்மாவின்
இரண்டாம் ஆண்டு இயற்கை எய்திய
இந்நாளை நாம் நன்றியுடம்
நினைவு கூருகின்றோம்
துளியின் பயணம் கடலில் நன்கே தொடரட்டும்.
Throw away those little pieces of paper.
Get yourself a big, beautiful canvas
Bring from this nature the most beautiful colors.
Find the serene scene within
Find the joy in each corner of your life
Sit still and feel what is within you.
Sit still and paint like you have never painted before
- Prem Rawat