1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராசமணி செல்லத்துரை
இளைப்பாறிய ஆசிரியை- கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம், பொல்காவலை தமிழ் கலவன் பாடசாலை, இலங்கை
வயது 87
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசமணி செல்லத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பெற்றெடுத்து ஆளாக்கி பெரு வாழ்வை உருவாக்கி
கற்றவரும் உற்றவரும் போற்ற
கரைந்துருகி ஒளியேற்றிய உயிர் தீபமே
மரணம் அழைக்கும் வரை மகிழ்வாய் அணைத்தாய்
வாழ்வில் நாம் ஒளிர மெழுக்காய் கரைந்தாய்
உலகில் உறவில் உயர்வாக்கி
உமைக் கரைத்து உழைத்தாய்
கவலை மறந்து மகிழ்ந்தாடுகையில்
எமை விட்டு ஏன் மறைந்தாய்
தாய் என்றும் மறைவதில்லை
தன் பிள்ளைகளின் இதயத்தில் என்றும்
வாழ்ந்து கொண்டிருப்பாள்
இதுவே இயற்கையின் நியதி
இதை யாராலும் மாற்ற முடியாது
தாய் ஒரு உடம்பல்ல
தாய் ஒரு சக்தி
தாயின் நினைவு வாழ்வின் ஆதாரம்
தாய் என்றென்றும் எம்முடன் வாழ்வாள்
தகவல்:
குடும்பத்தினர்