Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 10 MAR 1938
மறைவு 21 JUL 2025
அமரர் இராசலிங்கம் புஸ்பராசமணி 1938 - 2025 புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி : 10-07-2026

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி(ஸ்ரீ வேல் முருகன் ஸ்ரோர்ஸ்), யாழ். ஆனைப்பந்தி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசலிங்கம் புஸ்பராசமணி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

வாழ்வில் மறக்க முடியாத ஒர் உறவு.

அன்பின் முகவரியே அம்மா.
 தியாகத்தின் உருவமே மகத்தான தாயே!
ஆண்டு ஒன்று கடந்தாலும் ஆறவில்லை.
 உங்கள் நினைவுகள் அம்மா!

அம்மா உங்கள் சிரிப்பு எங்கள் நினைவுகளில் வாழ்கிறது
 உங்கள் அக்கறை எங்கள் தினசரி வாழ்வில்
 ஓர் அங்கமாகவே இருக்கிறது.
அம்மா உங்கள் விம்பம் எம் கண்ணில்
 கண்ணுறங்கும் நேரத்தில் கனவினில் உங்கள்
திருமுகம் காண்கையில் கண் விழித்து தேடுகின்றோம்.
உங்கள் விம்பம் காண வில்லை...

கண்களில் வழிந்திடும் கண்ணீர் துடைத்திட
 யாருண்டு தாயே? ஆயிரம் அறிவுரை சொல்லி
 எங்களை அரவணைத்தீர்கள்
எமை கவசமாய் நின்று பாதுகாத்து வளர்த்தீர்கள்
இப்போது எமை விட்டு சென்று விட்டீர்கள்
மீதிக்காலமதைக் கழிக்கும் வகை தெரியாது
வாடுகிறோம் அம்மா.

நடந்தவை கனவாகப் போகாதோ...
மீண்டும் ஒருதரம் வாய்விட்டு அழைத்து
 எங்களை அரவணைக்க மாட்டிர்களா அம்மா.
 எங்களை தேடும் உங்கள் கண்களும்
தெவிட்டாத அமுதூட்டிய கைகளும்
 எங்களை தீண்டும் உங்கள் விரல்களும்
 தாய்மையும் மீண்டும் கிடைக்காதா அம்மா.

நிலையற்ற வாழ்வில் காலங்கள் கடந்து போகும்
அம்மா நீங்கள் எங்களுடன் வாழ்ந்த நாட்களும்
நினைவுகளும் நிலையானவை இவை
 காலத்தையும் கடந்து எம்மிடத்தில் நிலைத்து நிற்கும்.

எதிலும் நீங்கள் அம்மா, எல்லாமே நீங்கள் அம்மா
 எம் தெய்வமே உங்கள் ஆத்மா
திருவெண்ணாமலையான் திருவடியில்
 நிம்மதி அடைய பிரார்த்தின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Granny Love Rihan, Aidan, Sreya and Daren

RIPBook Florist
United Kingdom 1 year ago

Photos