Clicky

தோற்றம் 03 JUN 1954
மறைவு 17 NOV 2025
திருமதி இராசகுலநாயகி சிவபாலசிங்கம் (இராசம்)
வயது 71
திருமதி இராசகுலநாயகி சிவபாலசிங்கம் 1954 - 2025 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

துஷ்யந்தி 22 NOV 2025 India

நான் பார்த்த பேரழகி நான் பார்த்த சரிப்பழகி நான் பார்த்த திறமைசாலி நான் பார்த்த துணிச்சல் காரி பொற்கோலம் வரைந்த புதுமைக்ககாரி என் மனதில் வரைந்த ஓவியம் ஒரு பெண் எனும் காவியம் பெண்மைக்கு இலக்கணமென நான் படித்த புத்தகம் நெற்றியில் சிவந்த குங்குமம் பற்களில் பொங்கி மறையும் சிரிப்பு கண்ணத்தில் மலரும் கண்ணக்குழிகள் கண்களில் ஒளிந்திருக்கும் கண்ணாடி உச்சிக் கொண்டை வானவில்லில் தோய்த்த ஆடை, நிமிர்ந்த நடையோடு காற்றையும் கட்டுப்படுத்தும் கம்பீர உருவம் என் கண்களில் நிழலாட கண்ணீர் மல்கிப் போகிறேன் கூட்டுக்குடும்பமாய் வாழ்ந்த நாட்கள் அம்மாவை நீங்கள் அன்பாய் நகர்ந்த நொடிகள் கூடி மகிழ்ந்திருந்த தருணங்கள் மறக்குமா நெஞ்சம் மனம் கலங்கி போகிறேன் மௌனமாய் நாட்கள் நகர்ந்திருக்கலாம் ஆனால் மனம் என்றும் நினைக்க மறந்ததில்லை அணு கனமும் மலர்ந்த பூ நீங்கள் இதை பார்த்த இறைவன் பொறாமையில் என் காலடியில் மலரட்டும் என பறித்துக் கொண்டானோ அவன் காலடியில் மலர்ந்ததால் அவன் மகிழ்ச்சியில் ஆனால் நீங்கள் இன்றி இங்கு எங்கள் நந்தவனமே கலங்கி வாடிப்போனது குலம் விளங்க வந்த நாயகி எங்கள் ராஜ குலநாயகி மனங்களை வென்ற நாயகி என்றுமே என் நாயகி❤️

Tributes