2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராசையா இராஜரட்ணம்
ஓய்வுபெற்ற கிராமசேவை அலுவலர்
வயது 73
Tribute
15
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கிளிநொச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசையா இராஜரட்ணம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டு ஆன போதிலும் நீங்களின்றிய
துயரங்கள் இன்னும் ஆறவில்லை அப்பா!!
எம்மை படைத்த எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு!
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!
இரண்டு வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும் ஏதோ ஓரிடத்தில் உங்களின் ஞாபகம்
அப்பா மீண்டும் வரமாட்டாரா என ஏங்குவோம் நாங்கள்!
உங்களின் மீதான எங்களின் தேடல்கள்
எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை ஓயாது!!
தகவல்:
குடும்பத்தினர்