
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை வீமன்காமம் Dutch Road , நீர்கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசையா தங்கம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் தாய் மனசு வெள்ளை அதில்
நான் வளர்ந்தமுல்லை
பல நூறு தவமிருந்து என்னைப் பக்குவமாய் பெற்றெடுத்து
வாழ்நாள் முழுவதுமே எங்களுக்காய் பாடுபட்டு
மார்பிலையும் தோழிலையும் நான் உறங்க ஏணைகட்டி
சுமை தாங்கிக்கல்லைப் போல் என் சுமையை தாங்கியவளே
சோதனையும் வேதனையும் சுமந்து சோகப்பட்டாய்
காலத்துக்கும் என் அப்பா கூட சரிசமளாய் பாடுபட்டாய்
கண்ணுபூத்து காது பூத்து எங்களுக்காய் காத்திருந்தாய்
தொப்புள்கொடி உறவுதந்து ஊருசனம் முன்னாடி
பொத்திப் பொத்தி என்னை வளர்த்து உயர்த்திவைத்தாயே
அன்னையே அன்னையே சொல்லத்தான்
கோடி வார்த்தை போதலையே
அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்னை விட்ட எனக்கு யாரு அம்மா....
ஓராண்டு நிறைவுற்றாலும் என்னுடன் நீங்கள்
என்றும் நிறைந்திரும்பீர்கள்!!
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும்
ஆறாத்துயரில் தவிக்கின்றோம்
ஆயிரம் உறவுகள் இருந்து என்ன
உன்னைப்போல் அன்பு காட்ட
ஆறுதல் கூறிட யாரும் இல்லை அம்மா..
எம்மை தனித்து தவிக்கவிட்டு
ஏன் அம்மா சென்றாய்?
பிள்ளைகள் தான் உலகம்
என்று வாழ்ந்தாயே அம்மா
தனியாளாய் நின்று எம்மை வளர்த்தாயே
நாங்கள் வளர்ந்து உன்னை பார்க்கும் வேளையில்
எம்மை அழவிட்டு சென்றதேனோ?
கலங்கி நிற்கும் எமக்கு ஆறுதல் கூற
தூக்கம் கலைந்து எழுந்து வாம்மா...
ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!
உங்கள் பிரிவால் துடிக்கும் பிள்ளைகள்
மருமக்கள் பேரப்பிள்ளைகள்