
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை வீமன்காமம் Dutch Road , நீர்கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசையா தங்கம்மா அவர்கள் 27-01-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு கதிராசி தம்பதிகளின் அன்பு மகளும், இளையதம்பி கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
நவநீதராஜா(சந்திரன்), செளந்தரராஜா(ரவி), விஜயராஜா(விஜயன்), சிறீஸ்கந்தராஜா(சிறீ), அசோகராஜா(அசோகன்), மோகனதாசன்(மோகன்), வினோதினி(வினோ), மன்மதராசன்(மதன்), நியதினி(நியதா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மதிவதனி(இலங்கை), கமலேஸ்வரி(இலங்கை), தமிழ்ச்செல்வி(பிரான்ஸ்), சிவாத்திரிநயனி(லண்டன்), சுபாசினி(சுவிஸ்), கலைமதி(சுவிஸ்), குழந்தை வடிவேல்(ஜேர்மனி), சூரியகலா(ரதி- இலங்கை), வேணுதாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராசையா, காலஞ்சென்றவர்களான அன்னம்மா, கண்மணி, மூத்தத்தம்பி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், வைத்திலிங்கம், கந்தையா, சின்னத்துரை, பாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுஜீரா, சோபனா, தனுஷ்காந், நிதர்ஷா, யபினேஷ், தனுசிகன், அத்வைதன், அட்ஷகி, கேஷான், சுஸ்வின், கஜானி, வினுசன், மெளரிஷா, மானுஜா, மீரஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-01-2020 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தெல்லிப்பழை கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.