யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கிழக்கு முடமாவடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா மகாதேவன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 26-08-2024
அழகான வார்த்தை அப்பா
ஆயிரம் தடவை சொன்னாலும்
அழகான வார்த்தையிது
இதயத்தின் ஆழத்தில்
உதித்து உதிரத்தை
உறைய வைக்கும் வார்த்தையிது
ஈரமில்லா உள்ளத்தையே
உவகை கொள்ள செய்யும் வார்த்தையிது
உரிமையுடன் கூப்பிட்டு
உலகை வெல்லும் வார்த்தையிது
ஊரார்கள் முன்னாடி
உரம் தரும் வார்த்தையிது
எங்கெல்லாம் சென்றாலும் எம்
முகவரி சொல்லும் வார்த்தையிது
ஏமாற்றும் உலகத்தில்
ஏமாளியாகாமல் தரும் வார்த்தையிது
ஐஸ்வர்யம் அனைத்தையுமே
அள்ளித்தரும் வார்த்தையிது
ஒற்றுமையை எமக்கெல்லாம்
சொல்லித்தரும் வார்த்தையிது
ஓடோடி கட்டியணைத்து முத்தம் தரும் வார்த்தையிது
ஒளவுடதமாய் அனைத்தையும்
அனைவருக்கும் கற்றுத்தரும் வார்த்தையிது
உள்ளங்கை உறவுயிது
உயரத்தில் வைக்க நினைக்கும் உறவுயிது
அதனால் தான் என்னவோ உயிர் எழுத்தால் உண்மை நினைத்து
உள்ளம் கலங்கி வழி புரியாமல் தவிக்கின்றோம்
அப்பா அப்பா அப்பா.....
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!