யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமுப்பிள்ளை சுகுணதீரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நாட்கள் 31 சென்றாலும் அகலவில்லை
எங்கள் துயரம்-எம்
விழிகள் முட்டி நிற்குது கண்ணீரால்
நீங்கள் உங்கள் விழி மூடிய நாள் முதல்...!
உருக்குலைந்து விட்டோம் உயிரோடு
உங்கள் நினைவுகள் இன்றும் எம் மனதோடு
வாழ்க்கையின் அர்த்தங்கள் புரிந்து கொண்டோம்
உங்களால் -இன்று
வாழ்வதன் அர்த்தம் கூட புரியவில்லை
இருந்தும் வாழ்கின்றோம்
வானில் விடிவெள்ளியாய் நீங்கள்
தோன்றுவதாய் எண்ணி...!!
உங்களுடைய ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
சாந்தி! சாந்தி! சாந்தி
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஜெயன், சுமா மற்றும் குடும்பத்தவ வர்களுக்கும், "அம்மா அப்பாவுடன் அன்பாக பழகி வாழ்ந்திருந்த காலம் எங்கள் நினைவில் என்றும் நிறைந்திருக்கும்." அப்பாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.?