1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராமுப்பிள்ளை சுகுணதீரன்
இளைப்பாறிய கணக்காளர், யாழ். கல்வித் திணைக்களம், இளைப்பாறிய பிரதம கணக்காளர், வடக்கு, கிழக்கு மாகாண கல்வி அமைச்சு
வயது 88
Tribute
20
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமுப்பிள்ளை சுகுணதீரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்மைவிட்டு எங்கு சென்றீரோ!
எங்களைவிட்டு பிரிந்திடவே உங்களுக்கு
என்றும் மனம் வராதே!
எங்களை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து வழிநடத்திய அந்த நாள்
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும்
நீங்கள் சிவபதம் அடைந்து ஆண்டு ஒன்று
ஆகிவிட்டது நம்பவே முடியவில்லை
நேற்று நடந்தது போல எங்கள் கண்களில்
நீர் இன்னமும் காயவில்லை...
அப்பா என்ற சொல்லுக்கு
நீங்களே இலக்கணம்!
மனதில் உம்மை வைத்து
காலமெல்லாம் போற்றி நிற்போம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
ஜெயன், சுமா மற்றும் குடும்பத்தவ வர்களுக்கும், "அம்மா அப்பாவுடன் அன்பாக பழகி வாழ்ந்திருந்த காலம் எங்கள் நினைவில் என்றும் நிறைந்திருக்கும்." அப்பாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.?