யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், நெடுந்தீவு மற்றும் முல்லைத்தீவு பாண்டியன்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Northampton ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இராமுப்பிள்ளை சிவசம்பு அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
இரண்டு ஆண்டு ஆனது கண்மூடித்திறக்கும் முன்னே
அப்பா..! அப்பா..! என்றழைக்க என் உதடுகள்
இன்னமும் தான் ஓயவில்லை
அழியாத உங்கள் இனிய முகமும்
எம் நெஞ்சினின்று இன்னமும் நீங்கவில்லை
ஆண்டிரண்டு ஆகியென்ன, அழுதுபுரண்டென்ன
மறைந்துபோன எங்கள் அப்பா
மறுபடியும் தான் வருவதெப்போ....!!!
எங்கள் அன்பின் வடிவமே அன்பின் உறைவிடமாய்
பாசத்தின் இலக்கணமாய் பண்பின் உருவமாய் என்றும்
எங்கள் இதயத்தில் குடியிருக்கும் அன்பு தெய்வமே
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
இன்றுடன் இரண்டு ஆண்டுகள் மறைந்துவிட்டது
கடந்தகாலம் எக்காலத்திலும் திரும்பி
வரப்போவதில்லை ஆனாலும் நீங்கள்
எம்மை வாழவைத்து மகிழ்வித்த
காலத்தில் விட்டுச்சென்ற ஞாபகங்கள்
எமக்கு தினமும் கண்முன் நிறுத்தும்.
உங்கள் ஆத்மா இறைவனிடத்தில் அமைதிகொள்ள
பிராத்திக்கின்றோம்.
Toutes mes condoléances