மரண அறிவித்தல்
பிறப்பு 16 JUN 1926
இறப்பு 12 JAN 2021
அமரர் இராமு சின்னத்துரை (பவானியர்)
திருகோணமலை பிரபல வர்தகர் பவானி ஸ்டோர்ஸ் உரிமையாளர்
வயது 94
அமரர் இராமு சின்னத்துரை 1926 - 2021 நீர்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 37 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை நிலாவெளி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட  இராமு சின்னத்துரை அவர்கள் 12-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற இராமு, சேதுப்பிள்ளை தம்பதிகளின் செல்ல மகனும், காலஞ்சென்ற நிலாவெளி மூத்தகுடியைச் சேர்ந்த நன்னித்தம்பி, சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பவானிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

சத்யதேவி(பிரான்ஸ்), இந்திராதேவி(பிரான்ஸ்), கோமளாதேவி(கனடா), விக்னேஸ்வரன்(கனடா), செந்தில்செல்வன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற அய்யாத்துரை, சதாசிவம், செல்லத்துரை, காலஞ்சென்ற பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரும்,

தவபாலன், சிவதாசன், காலஞ்சென்ற கண்மணி, சிவநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராசானந்தம், நற்குலேந்திரன்(பிரான்ஸ்), சிவானந்தம்(கனடா), சிவாஜினி(கனடா),  சுவேந்திரினி(கனடா) ஆகியோரின் ஆசை மாமனும்,

துசாந்- நீலுஜா, துசாரா- பதி, அனுஜன்- துக்சி, கெளதமன்- தர்சி, மதுசா- கெளசிகன், சரன்யா, சோழன், தினேஸ், சேரன், சஞ்சீவன், காயத்திரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 16-01-2021 சனிக்கிழமை அன்று பி.ப 05:00 மணிமுதல் பி.ப 07:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 17-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று 12:00 மணிமுதல் பி.ப 02:30 மணிவரை தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

பின்ன என்பதும் 
பிறகு என்பதும்
இல்லை என்பதே...

- க.இ.சி


தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 10 Feb, 2021