Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 07 FEB 1935
இறப்பு 05 MAR 2021
அமரர் இராமசாமி அமிர்தம் 1935 - 2021 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமசாமி அமிர்தம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:- 13-02-2023

நிமிடங்களாய் நாட்களாய் மாதங்களாய்- இன்று
இரண்டு ஆண்டுகளாய் வளர்ந்து நிற்பது
உங்கள் பிரிவின்சோகம் அம்மா

அன்பென்னும் பாதையில் நாம்
அனைவரும் பயணிக்கவும்
எல்லா வளங்களையும் பெற்று
ஏற்றமுடன் வாழவும்
ஏணியாய் தாங்கிய எங்களின்
அன்புக்குரிய தாயே நாம்
கண்ணீரால் எழுதும் கவிமடல்

ஈர விழியோடு இராண்டு சென்றாலும்
மாறாது எம்துயர்
அம்மா என்று அழைக்கும்போது
அன்பாக அருகில் வந்து
அதரவாக எம்மை அணைத்திடும் சுகத்தினை
எங்களால் மறக்கமுடியவில்லை...

வேரென இருந்து எம்மை காத்தீர்கள்
அம்மா விழுதுகளாய் நாமிருந்தோம்
கண்ணிறைந்த கண்ணீராய்
நாம் காலமெல்லாம் அழுவதற்கோ
காற்றாக நீங்கள் பறந்தீர்கள்
ஆனாலும் அம்மா
கண்முன்னே தோன்றூம் உங்கள் நினைவுகள்
எம் உயிர் உள்ளவரை உயிர்வாழும்.

என்றும் உங்கள் அன்புக்கு ஏங்கும்
பிள்ளைகள்....!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices