5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராமநாதர் சுப்பிரமணியம்
(செல்லதம்பி)
வயது 77
அமரர் இராமநாதர் சுப்பிரமணியம்
1944 -
2021
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், தற்பொழுது கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமநாதர் சுப்பிரமணியம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஐந்து ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
இப்புவியில் அப்பா உம்மை நாம்
இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
ஆண்டுகள் ஐந்து ஆனதப்பா
உங்கள் நினைவுகள் வந்தெம்மை
துடிதுடிக்க வைக்குதப்பா!
ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்,
தந்தையே உன் போல் அன்பு
கொள்ள யாரும் இல்லையே
எம் உள்ளத்தின் இருக்கும் தெய்வம்
நீ அப்பா எத்தனை ஆண்டுகள்
சென்றாலும், உன் பாசத்திற்கு
நாம் பட்ட கடன் தீராதப்பா!
உந்தன் உடல் மட்டும் தான் பிரிந்து போனது
உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் உயிர் உள்ள வரை வாழுமப்பா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!
தகவல்:
குடும்பத்தினர்