1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 11 APR 1944
மறைவு 05 JUL 2021
அமரர் இராமநாதர் சுப்பிரமணியம் 1944 - 2021 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், தற்பொழுது கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமநாதர் சுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. 

திதி : 24/06/2022

ஆண்டொன்று ஆனாலும் ஆறமுடியவில்லை
 எம்மால் இப் பூமியில் உங்களை நாம்
 இழந்த துயரை ஈடு செய்ய
 முடியாமல் தவிக்கின்றோம்!

உங்களையே உலகமென
 உறுதியாய் நாமிருக்க ஏன்
விண்ணுலகம் நிரந்தரமாய் விரைந்தீரோ?

வதனங்கள் மட்டும் போதும்
 என்று புன்னகைக்கு வெண்ணிலவாய்
 போட்டோவில் ஒளி தந்து புன் சிரிப்புடன்
 எங்களை வாழ்த்தி நிற்கும் தெய்வமே!

நிழலாக இல்லாமல் நிஜமாக வந்திடுவீர்!
 காலங்கள் கடந்து சென்றாலும்
 ஒவ்வொரு நொடிகளிலும் இதயத்தின்
 துடிப்பைப் போல் அருகிலே நீங்கள்
 வாழ்வதை நாங்கள் உணருகின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்