மரண அறிவித்தல்
தோற்றம் 11 APR 1944
மறைவு 05 JUL 2021
அமரர் இராமநாதர் சுப்பிரமணியம் 1944 - 2021 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், தற்பொழுது கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதர் சுப்பிரமணியம் அவர்கள் 05-07-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராமநாதர், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இரஞ்சீதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பங்கயநாபன், சர்வநாபன்(மெக்கானிக்- யாழ்ப்பாணம்), சுதர்சினி, சதீஸ்நாபன்(மெக்கானிக்- சிவநகர்), யாழினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, ஐயாத்துரை, பூரணம், கனகம்மா, சின்னகிளி மற்றும் கந்தையா, புஸ்பவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மாணிக்கவாசகர், வசந்தமலர்(அரசினர் வைத்தியசாலை, உருத்திரபுரம்), சிறிகாந், மகாலக்சுமி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சங்கீதா(உபதபால் அதிபர்- மண்கும்பான்), நவநீதன்(கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கம், முகாமையாளர்), மேகலா, பகீரதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பவிந்தன், பத்திரா(இந்துக் கல்லூரி மாணவி), பகலவன்(சிவநகர்- அ. த. க பாடசாலை, மாணவன்), டிலானி(யாழ்/ மாணவி திருக்குடும்ப கன்னியர் மடம் உயர் தரப்பாடசாலை), கஜபிரஷாத்(யாழ்/ இந்துக் கல்லூரி), பவிஷாத்(யாழ்/செட்டித்தெரு மெதடிஸ் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை), ஆதித்தன், ஆர்த்திகா(சிவநகர்- அ. த. க பாடசாலை, மாணவன்), தியானா, சஞ்சை, விதுரா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் உருத்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல: 24/02 சிவநகர்,
உருத்திரபுரம்,
கிளிநொச்சி.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யாழினி - மகள்
மகாலக்சுமி - மைத்துனி
சர்வநாபன் - மகன்