யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தை வதிவிடமாகவும், பிரித்தானியா Ross-on-Wye ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் கமலேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தி பிரார்த்தனையும் மதியபோசன நிகழ்வும் 31-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் வருகை தந்து அன்னாரின் ஆத்மாசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
இல 105, கனகாம்பிகைக் குளம்,
கிளிநொச்சி.
அன்னாரின் அந்தியேட்டி நிகழ்வும் மதிய போசனமும் 01-04-2024 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் 04:00 மணிவரை ABI BAR AND RESTAURANT, 285-287 NORTHOLT RD, SOUTH HARROW, HA2 8JS எனும் முகவரியில் நடைபெறும். இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.
Rest in Peace Kamala Akka ❤️