Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 18 NOV 1960
மறைவு 07 OCT 2018
அமரர் இராமலிங்கம் தயாபரராசன்
வயது 57
அமரர் இராமலிங்கம் தயாபரராசன் 1960 - 2018 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி:09/10/2026
 
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமலிங்கம் தயாபரராசன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஆண்டு எட்டு ஆனாலும் ஆறவில்லை
எங்கள் சோகம் !
உங்களை இழந்து தவிக்கும் நாள் முதல்
என் விழிகளில் வழியும் கண்ணீர்த்துளிகளின்
வேதனைகள் உங்களிற்கு புரிகின்றதா !

நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த வரமாக நீங்கள் இருந்தீர்கள்!

எட்டு வருடங்கள் போனாலும்
மெளனமாக எனக்குள்ளே
என் மனசு அழுவதை நீங்கள் உணர்வீர்கள்
உணர்ந்து கொண்டேயிருப்பீர்கள் அப்பா!

எம்மை பிரிந்து காலங்கள் ஓடினாலும்
நீங்கள் எங்களிடம் விட்டுச் சென்ற பண்புகளால்
என்றுமே வாழ்கிறீர்கள் எங்கள் இதயத்தில்
அப்பா!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
பெருங்காடு பறிமுத்து மாரிஅம்மனை
வேண்டி தினமும் உங்கள் பாதம் பணிகின்றோம்..!

ஓம் சாந்தி... ஓம் சாந்தி... ஓம் சாந்தி...  

தகவல்: உங்கள் பிரிவால் வாடும் மனைவி,பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்